கனவு ஆசிரியர் 2023 - ஆசிரியர்கள் எவ்வாறு பதிவு செய்வது? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, March 9, 2023

கனவு ஆசிரியர் 2023 - ஆசிரியர்கள் எவ்வாறு பதிவு செய்வது?

 




கனவு ஆசிரியர் போட்டியின் வழிமுறைகள்

காலஅளவு மற்றும் செயல்படுத்தும் முறை

  • தேர்வின் காலஅளவு -40 நிமிடங்கள்
  • இணையவழித் தேர்வு
  • தேர்வர்கள், தாங்கள் விரும்பும் எந்த இடத்திலிருந்தும் தேர்வை எழுதலாம்..


அடிப்படைத் தேவைகள்


பயன்படுத்தும் கருவி : வெப்கேம் கொண்ட மேசைச்கணினி / மடிக்கணினி அல்லது முன்பக்கக் கேமராவைக் கொண்ட திறன்பேசியைப் (Android phone) பயன்படுத்தலாம். ஐபோனைப் பயன்படுத்தக் கூடாது.


இணைய வேகம் : குறைந்தபட்சம் 2 Mbps தேவை. (இணைய வேகம் மெதுவாக இருந்தால், தேர்வுகளை நிறைவு செய்ய அதிக நேரம் ஆகும்).


இணைய உலாவிகள் (Browsers) :


மேசைக்கணினி / மடிக்கணினியில் தேர்வு எழுதினால், கூகிள் குரோம்  / மைக்ரோ சாப்ட் எட்ஜ் / மொஸில்லாஎ பயர்பாக்ஸ் உலாவியின் (Browser) தற்போதைய பதிப்பு தேவைப்படுகிறது திறன்பேசியில் எடுத்தால், குரோம் உலாவி (Browser) தேவை. தேர்வு நேரம் முழுவதும் வெப்கேம் மற்றும் மைக்ரோஃபோன் இயக்கப்பட வேண்டும்.


குறிப்பிடத்தக்க நாள்கள்


  • . விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்- மார்ச் 8, 2023
  • . விண்ணப்பப் பதிவு முடிவடையும் நாள் - மார்ச் 18, 2023
  • தேர்வு நடைபெறும் நாள் - ஏப்ரல்1, 2023


தேர்வு சார்ந்த ஆவணங்கள் மற்றும் பிற முக்கிய அறிவுரைகள், தேர்வு நாளின் 48 மணிநேரத்திற்கு முன்பு பகிரப்படும்.


பாடத்திட்டம்:

• தலைமைப் பண்புகள்

• திறனாய்வுப் பார்வை

குழுவாக சேர்ந்து பணியாற்றும் திறன்

மொழி ஆளுமைக்கான

தகவல்தொடர்ப்புத் திறன்


விரிவான தகவல்களைக் கொண்ட பாடத்திட்டம், தேர்வு அமைப்பு, மாதிரி வினாக்கள் போன்றவற்றை மார்ச் 18, 2023 அன்று இந்த இணைப்பின்வழியாக


(www.emis.tnschools.gov.in) கனவு


ஆசிரியர் 2023 menu- வின் வாயிலாக நீங்கள் பெறமுடியும்.




Post Top Ad