தமிழக பட்ஜெட் - கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, March 20, 2023

தமிழக பட்ஜெட் - கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

 
எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?


* ஆதி திராவிட நலத்துறை - ரூ. 3,513 கோடி

* உயர்க்கல்வி துறைக்கு ரூ.6,967 கோடி 

* பள்ளிக்கல்வி துறைக்கு ரூ. 40,299 கோடி


தமிழக பட்ஜெட் 2023 - 2024 |  கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் 


பள்ளிக்கல்வி துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு பேசியவர், “ பேராசிரியர் அன்பழகன் பள்ளிகள் மேம்பாட்டுத்திட்டத்திற்கு 1500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும். இதனால் அனைத்து ஆசிரியர்களும் சம பயன்கள் பெறுவார்கள் என்றார்.


மேலும் ரூ.110 கோடி செலவில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 4 மற்றம் 5ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.10 கோடி செலவில் இலக்கியத் திருவிழா. சர்வதேச புத்தக காட்சிக்காக இந்தாண்டும் நடைபெறும். மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்காக இணைய தளம் அமைக்கப்படும். 3,50,000 புத்தகங்களுடன் மதுரை கலைஞர் நுாற்றாண்டு கலைஞர் நூலகம் வரும் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும்” என்று கூறினார்.


* ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், பள்ளி கல்வித்துறை கீழ் கொண்டுவரப்படும்


* பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் புதியவகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி நிதி ஒதுக்கீடு


* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.


* ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும்


* பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரிக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது


* ரூ. 110 கோடியில் 4,5-ம் வகுப்புக்கும் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது


* 54 அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகள் ரூ. 2,283 கோடியில் திறன்மிகு மையங்களாக உயர்த்தப்படும்


* புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 20 ஆயிரம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்


* திருச்சி, கோவை, மதுரை, நீலகிரியில் 100 கோடி ரூபாய் செலவில் ஆதி திராவிடர் நல விடுதிகள் கட்டப்படும்


* அனைத்து மாவட்டங்களிலும் ரூ.10 கோடி செலவில் புத்தகத்திருவிழா நடத்தப்படும்

Post Top Ad