ஜாக்டோ - ஜியோவுக்கு போட்டியாக புது அமைப்பு - Asiriyar.Net

Friday, March 31, 2023

ஜாக்டோ - ஜியோவுக்கு போட்டியாக புது அமைப்பு

 

'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்புக்கு போட்டியாக, 'தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு' என்ற, புதிய அமைப்பு உருவாகிஉள்ளது.


அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ என்ற கூட்டமைப்பாக செயல்படுகின்றன. அந்த அமைப்பின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.


ஆனால், ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் நெருங்கியும், அவை நிறைவேற்றப்படவில்லை என, ஜாக்டோ - ஜியோ தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில், அதற்கு போட்டியாக, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. அதன் துவக்க நிகழ்ச்சி, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது.


ஜாக்டோ - ஜியோவில் இடம்பெற்ற ஆசிரியர் சங்கங்களில் சிலவற்றை மட்டும் பிரித்து, இந்த கூட்டமைப்பில் சேர்த்துள்ளனர். புதிய கூட்டமைப்பு, தி.மு.க., அரசுக்கு ஆதரவாக செயல்படும் என, கூறப்படுகிறது.

Post Top Ad