வாட்ஸ்அப் குரூப் ஆப்ஷனில், இனி அதன் அட்மின் அனுமதித்தால் தான் புதிய நபர்கள் இணையும்படி அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. வாட்ஸ்அப் இன்ஸ்டண்ட் மெசேஜிங் ஆப் ஆகும். அருகில் உள்ளவர்கள் முதல் தொலைவில் உள்ளவர்கள் வரை அனைவருக்கும் இதன் மூலம் தகவல் பரிமாற்ற முடியும். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. வாட்ஸ்அப் ஆடியோ, வீடியோ காலிங், சேட், குரூப் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்குகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
IMG_20230313_144449_396
அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் குரூப் அம்சத்தில் மாற்றம் செய்துள்ளது. New approval feature for group chat admins என்ற அம்சம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அதாவது, புதிதாக ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இணைய வேண்டும் என்றால் அந்த குரூப் அட்மின் அனுமதித்த பின் தான் இணைய முடியும். குரூப் லிங்க் வைத்திருந்தாலும் கூட குரூப் அட்மின் அனுமதி வேண்டும் என்ற வகையில் புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் குரூப்பில் இந்த அம்சம் ஆன் செய்யப்படும். புதிய நபர்களின் விவரம் அதில் தெரிவிக்கப்படும். பின்னர் அட்மின் அவர்களை அனுமதிப்பர். இந்த அம்சம் மூலம் அட்மின் தங்களது குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என்றும் இது மிகவும் பயனுள்ள அம்சம் என்றும் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறு பயன்படுத்துவது?
வாட்ஸ்அப் குரூப் செட்டிங் பக்கம் செல்ல வேண்டும். அங்கு ‘Approve New Participants’ என்ற அம்சம் இருக்கும். அதை ஆன் செய்ய வேண்டும். அவ்வளவு தான்.
இந்த புதிய அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு, ஆப்பிளின் பீட்டா பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment