புதுவை பட்ஜெட் - முக்கிய அறிவிப்புகள் என்ன? - Asiriyar.Net

Monday, March 13, 2023

புதுவை பட்ஜெட் - முக்கிய அறிவிப்புகள் என்ன?

 புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு முழு நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார்.


புதுச்சேரியில் கடந்த 12 ஆண்டுகளாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது.


இந்நிலையில், இந்தாண்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டு பட்ஜெட் தொகையாக ரூ. 11,600 கோடி நிர்ணயித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு புதுவை அரசு அனுப்பி ஒப்புதல் பெற்றுள்ளது.


இதனைத் தொடர்ந்து புதுவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று முதல்வர் ரங்கசாமி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.


அதில், புதுவை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்படும். தமிழ் வளர்ச்சி, ஆராய்ச்சியை மேம்படுத்த புதுவையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும். மீனவர் உதவித் தொகை ரூ.3,000-ல் இருந்து ரூ.3,500-ஆக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், மின்துறைக்கு ரூ.1,946 கோடியும், மின் சிக்கனத்தை கடைபிடிக்க ரூ. 4.6 கோடியில் எல்இடி தெருவிளக்குகள் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Post Top Ad