'நாட்டு நாட்டு' பாடலுக்கு "ஆஸ்கர் விருது" - Asiriyar.Net

Monday, March 13, 2023

'நாட்டு நாட்டு' பாடலுக்கு "ஆஸ்கர் விருது"

 
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயிரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், ‘ஆர்.ஆர்.ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலை பாடிய கால பைரவா, ராகுல் சிப்ளிகஞ்ச்; பாடலின் Famous Steps-க்கு நடன கலைஞர்கள் நடனமாடி அரங்கில் இருந்தவர்களை குஷிப்படுத்தினர், இந்த பகுதியை தீபிகா படுகோன் அறிமுகம் செய்து வைத்தார்.


ஆஸ்கர் விழாவில் வழங்கிய விருதுகளின் தொகுப்புகள் பின்வருமாறு...


*சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை இந்தியாவின் The elephant whisperers வென்றது. இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் விருதை பெற்றனர்.யானைகளை பராமரிக்கும் முதுமலையில் உள்ள பொம்மன் மற்றும் பெல்லி ஆகிய தம்பதி குறித்த இந்த படத்திற்கு விருது கிடைத்துள்ளது.


*ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.


* சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பின்னாச்சியோ-வுக்கு வழங்கப்பட்டது.


*சிறந்த துணை நடிகருக்கான விருது Everything Everywhere All At Once படத்தின் கி ஹு ஹுவானுக்கு அறிவிக்கப்பட்டது.


*சிறந்த துணை நடிகைக்கான விருது Everything Everywhere All At Once படத்தின் ஜேமி லீ கர்டிஸுக்கு அறிவிக்கப்பட்டது.


*சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருது நவல்னி ஆவணப்படத்துக்கு வழங்கப்பட்டது; சிறந்த ஆவணப்படத்துக்கான பிரிவில் போட்டியிட்ட இந்திய படமான All That Breathes-க்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை.


*சிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கர் விருது The whale திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது; ஆட்ரியன் மோரோட், ஜூடி சின், அன்னிமேரி பிராட்லி ஆகியோர் ஒப்பனைக்கான ஆஸ்கர் விருதை பெற்றனர்.


*சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருது All Quiet on the Western Front படத்தில் பணியாற்றிய ஜேம்ஸ் ஃபிரெண்டுக்கு வழங்கப்பட்டது.


*An Irish Goodbye-க்கு சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

டாம் பெர்கெலி மற்றும் ராஸ் ஒயிட் ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்டனர்.


*சிறந்த ஆடை வடிவைப்புக்கான ஆஸ்கர் விருது Black Panther Wakanda Forever படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.


*சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருது ஜெர்மனியைச் சேர்ந்த All Quiet On The Western Front படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


*சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது All Quiet On The Western Front படத்திற்கு கிடைத்துள்ளது.


*சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை வென்றது Alll Quiet On The Western Front படம். Alll Quiet On The Western Front படத்தின் இசையமைப்பாளர் வோர்கல் பெர்டில்மான் ஆஸ்கர் விருதை பெற்றார்.


*ஜெர்மனியைச் சேர்ந்த All Quiet on the Western Front என்ற படம் இதுவரை 4 ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த சர்வதேச படம், இசை, ஒளிப்பதிவு, தயாரிப்பு வடிமைப்பு ஆகிய பிரிவுகளில் 4 விருதுகளை வென்றுள்ளது.


*|சிறந்த Visual Effects பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது 'அவதார் தி வே ஆஃப் வாட்டர்' படம்! ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பேன்ஹம், எரின் சேண்டன், டேனியல் பேரட் ஆகியோர் ஆஸ்கர் விருதினை பெற்றுக் கொண்டனர்.Post Top Ad