விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளித் திறப்பு - தெளிவுரை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, December 31, 2022

விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளித் திறப்பு - தெளிவுரை

 


இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளித் திறப்பு தொடர்பான பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் சுற்றறிக்கை :


🔸அனைத்துப் பள்ளிகளும் 02.01.2023 அன்று திறக்கப்பட வேண்டும்.


🔸1 முதல் 3 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் 02.01.2023 முதல் 04.01.2023 வரை தவறாது எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.


🔸6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 02.01.2023 முதல் பள்ளி திறக்கப்பட வேண்டும்.


🔸ஓராசிரியராக இருக்கும் தலைமை ஆசிரியர்கள் தவறாது எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். ( _குறிப்பு - SMC மூலம் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி இல்லை. தலைமையாசிரியர்கள் EE பயிற்சி பெற்று அவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்_ )


🔸4 மற்றும் 5 ஆம் வகுப்பு போதிக்கும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  02.01.2023 முதல் பள்ளிக்கு வருகை தந்து கீழ்கண்ட செயல்களில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


1. மூன்றாம் பருவத்திற்குரிய பாடநூல்கள் பள்ளியில் இருப்பதை உறுதி செய்தல்.


2.பள்ளிக் கல்வித்துறையால் பள்ளிக்கு வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும்  Emis portal- ல் பதிவு  செய்தல்.


3. மூன்றாம் பருவத்திற்குரிய பாடத்திட்டங்கள் தயாரித்தல்.


4. கற்றல் உபகரணங்கள் தயாரித்தல்.


5. வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம் தூய்மை செய்தல்.


6. அனைத்து ஆசிரியர்களுக்கும் 02.01.2023 முதல் TNSED Attendance New App ல் வருகைப் பதிவு மேற்கொள்ளுதல்.


7.ஒன்று முதல் ஐந்து வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஜனவரி ஐந்து முதல் தொடங்கும்.





Post Top Ad