பொங்கல் போனஸ், அட்வான்ஸ் வேண்டும் - பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, December 16, 2022

பொங்கல் போனஸ், அட்வான்ஸ் வேண்டும் - பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!

 

பொங்கல் பண்டிகை வர உள்ளது. அரசு பள்ளிகளில் 10 ஆண்டுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரிகிற 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்  தங்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளார்கள்.


கோரிக்கை குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியது :


பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் கேட்டு பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை வைத்து உள்ளோம்.


பண்டிகை முன்பணத்தை எங்களின் மாத சம்பளத்தில் தவணையாக பிடித்தம் செய்து கொள்ளலாம்.


அரசு பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை உள்ளிட்ட சிறப்பு பாடங்களை பகுதிநேர ஆசிரியர்கள் கற்று தருகிறோம்.


அரசு ஊழியர்-ஆசிரியர்கள் மற்றும் தொகுப்பூதிய பணியாளர்கள், பகுதிநேர ஊழியர்கள் என அனைவருக்கும் அரசின் போனஸ் கிடைக்கிறது.


ஆனால் பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் 2012ம் ஆண்டு முதல் பணிபுரியும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு போனஸ் மற்றும் அட்வான்ஸ் இதுவரை கிடைக்க செய்யவில்லை.


எனவே, மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கல் போனஸ் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற 181வது வாக்குறுதியை 12ஆயிரம் குடும்பங்கள்  எதிர்நோக்கி காத்துள்ளோம். 19 மாதங்கள் ஆகிவிட்டது.


எனவே,எங்களின் சம்பளத்தை உடனே உயர்த்த வேண்டும் . முதல்வர் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தினால் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களின் வேண்டுகோள் நிறைவேறும் நிலை உள்ளது.


இனி முதல்வர் தான் முடிவு எடுக்க வேண்டும்.


--------------------------------------

எஸ்.செந்தில்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

செல் : 9487257203








Post Top Ad