பிப். 23ம் தேதி தமிழக பட்ஜெட் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, February 16, 2021

பிப். 23ம் தேதி தமிழக பட்ஜெட்

 




தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வருகின்ற 23ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 23ம் தேதி தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பி.எஸ். இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். தமிழக சட்டப்பேரவை வருகின்ற 23ம் தேதி மீண்டும் கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி 5ம் தேதி வரை நடைபெற்றது. ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால் இம்முறை தமிழக அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறது. அந்த வகையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல் ஓ.பி.எஸ். தாக்கல் செய்கிறார்.


இதற்காக 23ம் தேதி மீண்டும் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. தேர்தல் காலம் என்பதால் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் குறிப்பாக மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. இந்த இடைக்கால பட்ஜெட்டுக்கு தமிழக அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. புதிய செலவுகள், வரவுகள் தொடர்பான முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே இந்த பட்ஜெட் முழுமையான பட்ஜெட்டாக இருக்கலாம் என்று ஒருதகவல் வெளியாகி உள்ளது. இடைக்கால பட்ஜெட் தொடர்பாக என்னென்ன திட்டங்கள் இடம்பெற வேண்டும். அம்சங்கள் என்ன? என்பது குறித்து விவாதிப்பதற்காக தமிழக முதலமைச்சர் தலைமையில் அண்மையில் அமைச்சரவை கூட்டமும் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இடைக்கால பட்ஜெட் 23ம் தேதி தாக்கல் செய்வதற்கு திட்டமிட்டு அதற்கான அறிவிப்பினை தற்போது சட்டப்பேரவை செயலகம் வெளியிட்டுள்ளது.


Post Top Ad