நாளை (20.01.2025) பள்ளிகள் திறப்பு - தொடர்ந்து 12 நாட்கள் செயல்பட வாய்ப்பு - Asiriyar.Net

Sunday, January 19, 2025

நாளை (20.01.2025) பள்ளிகள் திறப்பு - தொடர்ந்து 12 நாட்கள் செயல்பட வாய்ப்பு

ஆறு நாட்கள் பொங்கல் விடுமுறை முடிந்து நாளை ஜனவரி 20ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது 


பள்ளிகள் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் செயல்பட உள்ளது 


பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடந்த 10-ம தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது 11 மற்றும் 12ம் தேதி பள்ளிகள் விடுமுறையாக இருந்த போதும் 13ஆம் தேதி திங்கள்கிழமை பள்ளிகள் செயல்பட்டன 


இந்நிலையில் 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 6 நாட்கள் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டது விடுமுறை முடிந்து நாளை ஜனவரி 20ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது 


கடந்த 14ஆம் தேதி பொது விடுமுறையாக அரசு அறிவித்ததால் இதற்கு மாற்றாக வரும் 25ஆம் தேதி சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது வரும் 26 ஆம் தேதி குடியரசு தினம் 


பெரும்பாலான பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்படும் இதனால் 20ஆம் தேதி முதல் 31-ஆம தேதி வரை தொடர்ந்து 12 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது




 

No comments:

Post a Comment

Post Top Ad