தொடர்ந்து உயரும் தங்கம் விலை; ஒரு சவரன் ரூ.61 ஆயிரத்தை நெருங்கியது - Asiriyar.Net

Thursday, January 30, 2025

தொடர்ந்து உயரும் தங்கம் விலை; ஒரு சவரன் ரூ.61 ஆயிரத்தை நெருங்கியது

 



இன்று (ஜன.,30) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.60,880க்கும், ஒரு கிராம் ரூ.7,610க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது.கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை ஏற்றம், இறக்கங்களை கண்டு வருகிறது. சென்னையில் ஜன.,28ம் தேதி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.60,080க்கு விற்பனை செய்யப்பட்டது.


நேற்று (ஜன.,29) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்தது. ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிராம் ரூ.7,595க்கும், ஒரு சவரன் ரூ.60,760க்கும் விற்பனை செய்யப்பட்டது. 


இந்நிலையில் இன்றும் (ஜன.,30) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.60,880க்கும், ஒரு கிராம் ரூ.7,610க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.61 ஆயிரத்தை நெருங்கியதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



No comments:

Post a Comment

Post Top Ad