பிரிண்டர் வசதியின்றி அல்லல்படும் ஆசிரியர்கள் - Asiriyar.Net

Wednesday, January 22, 2025

பிரிண்டர் வசதியின்றி அல்லல்படும் ஆசிரியர்கள்

 

அரசு தொடக்கப் பள்ளிகளில் "பிரின்டர்" வசதியில்லாததால். மாநில கற்றல் அடைவு ஆய்வு மதிப்பீட்டுத் தேர்வு வினாத்தாள் எடுக்க முடியாமல் ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.


அரசு மற்றும் உதவிபெறும் தொடக்க நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளி லுள்ள 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்க ளுக்கு மாநில கற்றல் அடைவு ஆய்வு மதிப்பீட்டுத் தேர்வு பிப் 4 முதல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது


முதல் மாதிரி வினாத்தாள் ஜன., 13 ல், இரண்டாம் மாதிரி வினாத்தாள் ஜன., 20 ல், 3ம் மாதிரி தேர்வு வினாத்தாள் ஜன., 27 ல் வழங்கப்படும். இதனை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் http://exam.tnschools.gov.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்கான விடைக்குறிப்புகள் ஜன., 30ல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தொடக்கப்பள்ளிகளில் பிரிண்டர் வசதியில்லை. மூன்றாம் வகுப்பு வினாத்தாள் 14 பக்கங்கள், ஐந்தாம் வகுப்புக்கு 23 பக்கங்கள் உள்ளன. ஒவ்வொரு பக்கத்திற்கும் பிரின்ட் எடுத்தால் ஒரு பிரின்ட் ரூ.5 வீதம் ரூ.185 செலவிட வேண்டும். இதனை ஜெராக்ஸ் ஆக பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் போது ஒரு மாதிரி தேர்வு நடத்த குறைந்த பட்சம் ரூ.1000க்கு மேல் செலவிடும் நிலை உள்ளது.




No comments:

Post a Comment

Post Top Ad