இன்றைய 10 சொற்கள்! - Asiriyar.Net

Thursday, January 30, 2025

இன்றைய 10 சொற்கள்!

 



*7️⃣📚 இன்றைய 10 சொற்கள்!*


1. Peremptory (பரெம்ப்டரி) - முடிவான.


The officer issued peremptory commands.


அதிகாரி முடிவான கட்டளைகளை பிறப்பித்தார்.


2. Astatic (எஸ்டடிக்) - நிலையில்லாத.


The child sleeps in the evening astatic.


குழந்தை மாலையில் நிலையில்லாமல் தூங்குகிறது.


3. Trench (டிரென்ச்) - அகழி.


Workers dug a trench for gas lines.


தொழிலாளர்கள் எரிவாயு இணைப்புகளுக்கு ஒரு அகழியை தோண்டினர்.


4. Penurious (பென்யூரியஸ்) - ஏழ்மையான.


Government assistance is available for penurious families who cannot afford to purchase food.


உணவு வாங்க முடியாத ஏழ்மையான குடும்பங்களுக்கு அரசு உதவி கிடைக்கிறது.


5. Devoid (டிவாய்ட்) - காலியான, இல்லாத.


Their apartment is devoid of all comforts.


அவர்களுடைய குடியிருப்புகள் அனைத்து வசதிகளும் இல்லாதவை.


6. Deliverance (டெலிவெரன்ஸ்) - விடுதலை.


She shut her eyes and prayed for deliverance.


அவள் கண்களை மூடி, விடுதலைக்காக பிரார்த்தனை செய்தாள்.


7. Impecunious (இம்பெக்யூனியஸ்) - கையில் பணம் இல்லாத.


He came from an impecunious family.


அவர், கையில் பணம் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவர்.


8. Jibe (ஜைப்) - ஒத்துப்போதல்.


His story did not jibe with the testimony.


அவரது கதை சாட்சியத்துடன் ஒத்துப்போகவில்லை.


9. Maternity (மெடர்னிட்டி) - மகப்பேறு.


Her maternity leave will create a temporary vacancy.


அவளது மகப்பேறு விடுப்பு ஒரு தற்காலிக காலியிடத்தை உருவாக்கும்.


10. Progenitor (ப்ரோஜெனிடர்) - முன்னோடி


Ravi was a great progenitor of modern dance.


ரவி, நவீன நடனத்திற்கு ஒரு பெரிய முன்னோடியாக இருந்தார்.



No comments:

Post a Comment

Post Top Ad