அரசு பள்ளி வகுப்பறைக்குள் வீசப்பட்ட மனிதக் கழிவு - ஆசிரியர்கள் அதிர்ச்சி! - Asiriyar.Net

Wednesday, January 29, 2025

அரசு பள்ளி வகுப்பறைக்குள் வீசப்பட்ட மனிதக் கழிவு - ஆசிரியர்கள் அதிர்ச்சி!

 




பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலை பள்ளி வகுப்பறையில் மனித கழிவு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இன்று காலையில் வழக்கம் போல 10ம் வகுப்புக்கான அறைக்கு மாணவர்கள் சென்ற போது அதிர்ச்சி அடைந்தனர். அங்குள்ள ஜன்னலிலும் மாணவர்கள் உட்காரும் இருக்கையிலும் மனிதக் கழிவுகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீசி விட்டுச் சென்றது தெரியவந்தது.


இதையடுத்து மாணவர்கள், தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, பல்லடம் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வகுப்பறையில் மனித கழிவை வீசிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad