ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பை, தமிழக அரசு எப்போது வெளியிடும் என எதிர்பார்த்து, பி.எட்., பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யானது, ஆசிரியர் தகுதித் தேர்வான, டெட் தேர்வை நடத்துகிறது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிகளின் படி, ஆண்டுக்கு இருமுறை இந்தத் தேர்வை நடத்த வேண்டும்; ஆனால், 2023 அக்டோபர் மாதத்துக்கு பின், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை.
கடந்த, 2024 ஜூலை மாதம் வருடாந்திர தேர்வு அட்டவணையில், டெட் தேர்வு நடத்தப்படும் என, தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் அறிவிப்பு வெளியிட்டன. இருப்பினும், 2024ம் ஆண்டு நிறைவு பெறும் வரை தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை. இத்தேர்வுக்காக மாநிலம் முழுதும், இடைநிலை ஆசிரியர்கள், பி.எட்., பட்டதாரி ஆசிரியர்கள் லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர முடியும். தேர்வு நடக்கும் தேதியை நடப்பாண்டு, தமிழக அரசு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment