ஆசிரியர்கள் மீதான குற்ற வழக்குகளை ரத்து செய்ய ஆசிரியர் சங்கம் கோரிக்கை - Asiriyar.Net

Monday, January 27, 2025

ஆசிரியர்கள் மீதான குற்ற வழக்குகளை ரத்து செய்ய ஆசிரியர் சங்கம் கோரிக்கை

 



வேலை நிறுத்த போராட்டத்தில் பங் கேற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழி யர்கள் மீதான குற்ற வியல் வழக்குகளை, அரசு ரத்து செய்த ஆணையை பின்பற்றி, வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என, தேசிய ஆசிரி யர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 


இது குறித்து, தேசிய ஆசிரியர் சங்க மாநில செயலாளர் வினோத் குமார், தமிழக காவல் துறை தலைமை இயக் குனருக்கு எழுதியுள்ள கடிதம்.


தமிழகம் முழுவதும், 2016, 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில், அரசு ஊழியர்கள் மற் றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தப் போராட்டங் களில் ஈடுபட்டனர். போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு, அரசின் கொள்கைக்கு ஏற்ப ஊதியம் வழங் கப்படவில்லை.


அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளும், குற் றவியல் வழக்குகளும் தொடரப்பட்டன. குற்றவியல் நடவ டிக்கைகளை கைவிட வேண்டியும், வேலை நிறுத்தக்காலத்தை பணிக்காலமாக மாற்ற வேண்டியும், தேசிய ஆசிரியர் சங்கம், தமிழ கத்தில் உள்ள பல்வேறு சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தன. 


இந்த கோரிக்கையை ஏற்று, அன்றைய தமிழக முதல்வர் அறிவிப்பின்படி, 2021ம் ஆண்டு குற்றவியல் நடவடிக்கைகளை கைவிடுவது, வேலை நிறுத்தக்காலத்தை பணிக்காலமாக கருதி, அந்த நாட்களுக்கு ஊதி யம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, சங்கங்களின் கோரிக் கையை ஏற்று அரசு, ஆணை வெளியிட்டது. 


தமிழக அரசு ஆணை பிறப்பித்த பிறகும், இன்று வரை அந்த குற்றவியல் வழக்குகள், அப்ப யே உள்ளன. அரசு வெளியிட்ட அரசா ணையின் அடிப்ப டையில், அந்த குற் றவியல் வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, கடிதத் தில் கூறப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment

Post Top Ad