திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் வராததால் பெற்றோர் முற்றுகையிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆசிரியர் வராததால் அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். அரசு தொடக்க பள்ளியில் சுமார் 74 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 2 ஆசிரியைகள் பணியாற்றுகின்றனர்.
கடந்த 3 நாட்களாக ஆசிரியர்கள் வராததால், மாணவர்கள் சாலையில் சுற்றி திரிந்தனர். இதனை கண்டித்து பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டதோடு, மாற்று பள்ளியில் இருந்து வந்த ஆசிரியரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment