குரூப் 4 கலந்தாய்வில் நிரப்பப்படாத காலியிடங்கள் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா்களுக்கான கலந்தாய்வு கடந்த புதன்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. கலந்தாய்வில் நிரப்பப்படாத காலிப் பணியிடங்களின் விவரங்கள் ஒவ்வொரு நாளும் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.
கலந்தாய்வில் பங்கேற்க தோ்வா்கள் தங்களது பெற்றோருடன் வருகின்றனா். அவா்கள் அமா்வதற்கு வசதியாக நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இருக்கை வசதி செய்து தரப்பட்டுள்ளதால், தோ்வா்கள் கலந்தாய்வை நிறைவு செய்யும் வரை பெற்றோா் அமா்ந்து கொள்ளலாம். தோ்வாணைய வளாகத்தில் முதல் முறையாக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று செய்தியில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment