தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் தலைவர் பாண்டியராஜன் கூறியதாவது:
தமிழகத்தில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 2016 ஊதிய குழுவில் நிலை10 ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு 40 தளங்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வு பெற்று வந்தனர்.
2021ம் ஆண்டு 40 தளங்கள் நிறைவு பெற்றதும், ஓர் ஆண்டாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. ஆசிரியர் இயக்கங்களின் கோரிக்கையின் படி 2021ம் ஆண்டு இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய உயர்வு பெற தளம் 45 வரை நீட்டிப்பு செய்து அரசாணை வழங்கின. 2025ம் ஆண்டு ஊதிய உயர்வு பெற்றவுடன் தளம் 45 உடன் நிறைவு பெற்றதால் 2026ம் ஆண்டு ஊதிய உயர்வு வழங்க இயலாது.
25 ஆண்டு பதவி உயர்வு இல்லாமல் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 2026ம் ஆண்டு ஊதிய உயர்வு இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு தொடர்ந்து ஆண்டு ஊதிய உயர்வு வழங்க ஊதிய தளத்தை நீட்டிப்பு செய்து உரிய அரசாணை வழங்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment