ஸ்மார்ட் கிளாஸ் ரூமில் பொருத்தப்படும் கேமரா முழு நேரமும் செயல்படும் என்பதால் ஆசிரியர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
இது குறித்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு தெரிவித்துள்ள அவசர அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது
ஸ்மார்ட் கிளாஸ் ரூமில் பொருத்தப்படும் Camera 24 மணி நேரமும்கண்காணிப்பில் இருக்கும். முழு நேரமும் இணைய தள இணைப் பில் இருக்கும். உயர் அதிகாரிகள் எங்கிருந்து வேண்டுமானாலும்கண் காணிக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. ஸ்மார்ட் கிளாஸ் ரூமில் சிசிடிவி வெப்கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் அனைத்து நிகழ்வுகளும் பதிவாகும்.
வெப்கேமரா மூலம் உயர் அதிகாரிகள் இருக்கும் இடத்தில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்களை ஆய்வு செய்யும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. மின்சாரம் தடைபட்டாலும் யுபிஎஸ் மூலம் இணையதளம் மற்றும் கேமரா வேலைசெய்யும்.
இதற்கு தகுந்தாற்போல் தங்கள் செயல்பாடுகளை வகுத் துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment