ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நேற்று 27.02.2025 திங்கட்கிழமை சென்னை திருவல்லிக்கேணி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்திற்கு திரு.பொன்னிவளவன் , திரு . பொன் செல்வராஜ் மற்றும் திரு . மயில் ஆகியோர் கூட்டுத் தலைமை ஏற்றனர் . மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன : - எதிர்வரும் 04.02.2025 செவ்வாய்க்கிழமை திருச்சியில் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடத்துவது 06.02.2025 வியாழக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டடத்தினைக் கூட்டுவது.
14.02.2025 வெள்ளிக்கிழமை தமிழகத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் தாலுகா அலுவலகங்களில் மாலை நேர ஆர்பாட்டம் நடத்துவது 25.02.2025 செவ்வாய்க்கிழமை தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எழுச்சிமிகு மறியல் போராட்டத்தினை முன்னெடுப்பது ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு தலைவர்களும் மாவட்ட நடத்துவதற்கான திட்டமிடலை ஒருங்கிணைப்பாளர்களும் ஜாக்டோ ஜியோ இயக்க நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பினை நல்குமாறும் போராட்டங்களை மிக எழுச்சியோடு மேற்கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment