சிவகாசியில் மது போதையில் வந்ததை தட்டிக்கேட்ட ஆசிரியர் மண்டையை மாணவர்கள் உடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திருத்தங்கல் சீ.ரா. அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 4 பேர் பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளனர். அவர்களிடம் ஆசிரியர் சந்திரமூர்த்தி விசாரித்துள்ளார்.
அப்போது அவர்கள் மீது மது வாடை வந்துள்ளது. மது அருந்தினீர்களா என ஆசிரியர் கேட்டதற்கு அவர்கள் மறுத்தனர். இருப்பினும் சந்தேகம் அடைந்த ஆசிரியர், அவர்களை தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்து செல்ல முயன்றார். இதனால், மாணவர்கள் அவரின் மண்டையை உடைத்தனர். இதனையடுத்து சந்திரமூர்த்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆசிரியர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நான்கு மாணவர்களை பிடித்து செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இச்சம்பவத்துடன் தொடர்புடைய 12ஆம் வகுப்பைச் சேர்ந்த 2 மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மது போதையில் வந்த மாணவர்களை தட்டி கேட்டு தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் செல்வதாக கூறிய பொது, அறிவியல் பிரிவு ஆசிரியர் சண்முக சுந்தரத்தை மறைத்து வைத்திருந்த மது பாட்டிலால் தலையில் தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
No comments:
Post a Comment