Income Tax Refund (ITR) தாக்கல் - பொய்யான Refund கேட்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!! - Asiriyar.Net

Thursday, July 17, 2025

Income Tax Refund (ITR) தாக்கல் - பொய்யான Refund கேட்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!!

 



வருமான வரி கணக்குகளில் போலியான விலக்குகள் மற்றும் சலுகைகள் கூறுபவர்கள் குறிவைத்து நாடு தழுவிய சரிபார்ப்பு நடவடிக்கையை வருமான வரித்துறை நேற்று தொடங்கியது


கடுமையான ஆய்வு 


அதிக விளக்கு கூறிய ஊழியர்கள் பொதுத்துறை நிறுவனங்கள் அரசு அமைப்புகள் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஆகியோர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 


மோசடியான உரிமை கோரல்களுக்கு எதிராக அபராதம் மற்றும் வழக்கு தொடர்வது உட்பட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வருமான வரித்துறை தயாராகி வருகிறது 


150 இடங்களில் நடந்து வரும் சரிபார்ப்பு நடவடிக்கையானது இந்த திட்டங்களுக்கு பின்னால் உள்ள நெட்வொர்க் அவற்றுக்கும் பொறுப்புகளை உறுதி செய்வதற்கும் உதவும் என்று அரசு கூறுகிறது 


ஆடிட்டர்கள் வைத்து பொய்யாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது டிஜிட்டல் பதிவுகள் உட்பட முக்கியமான ஆதாரங்களை கேட்டு விசாரணை செய்ய உள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. 


சில வருமான வரி தாக்கல் செய்பவர்கள் ஆடிட்டர்கள் மற்றும் இடைத்தரர்களால் மோசடி செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பல மோசடி கும்பல்கள் போலியான விளக்குகள் மற்றும் சலுகைகள் கூறி கணக்குகள் தாக்கல் செய்வது தெரிய வந்துள்ளது. 


இதுகுறித்து முழுமையான பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.








No comments:

Post a Comment

Post Top Ad