2003,2004 மற்றும் 2005 ஆகிய வருடங்களில் இடைநிலை ஆசிரியராக பதவி வகித்து 01/06/2006-ல் பணி வரன்முறை செய்யப்பட்டு தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான பதிவு இது
01/06/2026 முதல் மேற்கண்ட ஆசிரியர்களுக்கு இடைநிலை ஆசிரியர் பணியில் சிறப்பு நிலை வரவிருக்கிறது. தற்போது சிறப்பு நிலை என்பது நம் வட்டாரக் கல்வி அலுவலகத்திலேயே வழங்கப்பட உள்ளது. இன்னும் 11 மாதங்களே உள்ளதால் நம்மிடம் என்னென்ன உள்ளது என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான பதிவு இது*
*சிறப்பு நிலை பெற என்னென்ன வேண்டும் என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை பின்வருமாறு*
*முதல் முதலாக பணி நியமனம் செய்யப்பட்ட ஆணை*
*10,12 மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் மற்றும் இதற்கான உண்மைத் தன்மை*
*இடைநிலை ஆசிரியர் பணியில் பணி வரன்முறை செய்யப்பட்ட ஆணை மற்றும் தகுதி காண் பருவம் முடித்த ஆணை*
*இடைநிலை ஆசிரியர் பணியில் தேர்வுநிலை பெற்ற ஆணை*
*பி.ஏ., பி.லிட்., மற்றும் எம்.ஏ., பி.எட்., இவற்றிற்கான பட்டச் சான்றிதழ், உண்மைத்தன்மை மற்றும் முன் அனுமதி*
*மேற்கண்ட அனைத்தும் தங்களிடம் உள்ளதா என்பதை ஆசிரியர் பெருமக்கள் பார்த்துக் கொள்ளவும். இல்லை என்றால் இந்த 11 மாதத்திற்குள் பெற்று பணிப்பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளவும். தேவைப்பட்டால் பணிப்பதிவேட்டை அலுவலகத்தில் இருந்து பெற்று அதில் என்னென்ன பதிவுகள் உள்ளன என்பதை இப்போதே சரி பார்த்துக் கொள்ளுங்கள்*
*அடுத்த வருடம் ஜனவரி முதல் தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் இருக்கும். அதற்கு முன்னரே, இப்பொழுதே நம்மிடம் எவை இருக்கிறது எவை இல்லை என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். நன்றி வணக்கம்*
*குறிப்பு IGNOU-வில் பி.எட் பட்டம் பெற்றிருந்தால் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் மதிப்பீட்டு சான்றிதழ் பெற வேண்டும்
No comments:
Post a Comment