உயர் கல்வி போட்டித் தேர்வு பயிற்சி - முதுகலை ஆசிரியர்களை சுழற்சி முறையில் நியமிக்க உத்தரவு - Director Proceedings - Asiriyar.Net

Thursday, July 31, 2025

உயர் கல்வி போட்டித் தேர்வு பயிற்சி - முதுகலை ஆசிரியர்களை சுழற்சி முறையில் நியமிக்க உத்தரவு - Director Proceedings

 




வட்டார அளவிலான உயர் கல்வி போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் முதுகலை ஆசிரியர்களை சுழற்சி முறையில் நியமிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இணைப்பில் கண்டுள்ள வட்டார மைய பள்ளிகளில் நடைபெறும் பயிற்சியில் இயற்பியல் , வேதியியல் , கணிதம் , தாவரவியல் , விலங்கியல் , வணிகவியல் , கணக்குப் பதிவியல் , வணிகக் கணிதம் ஆகிய முதுகலை பாட ஆசிரியர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.


 மேலும் இப்பயிற்சிகள் தங்கு தடையின்றி நடைபெற ஏதுவாக , சார்ந்த வட்டாரத்திலுள்ள மையப் பள்ளித் தலைமை ஆசிரியர் / மையப் பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் ஒவ்வொரு வாரமும் பணிபுரிவதை உறுதி செய்திடவும் தெரிவிக்கப்படுகிறது.


 சனிக்கிழமைதோறும் இப்பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் / உதவித் தலைமையாசிரியர்களுக்கு மதிப்பூதியம் ரூ .1000 / - ( ரூபாய் ஆயிரம் ) மாதிரிப் பள்ளிகள் வழியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது .




No comments:

Post a Comment

Post Top Ad