8th Pay Commission - DA, TA, HRA சம்பளத்துடன் அலவன்சுகளிலும் அதிரடி ஏற்றம், எவ்வளவு தெரியுமா? - Asiriyar.Net

Monday, July 21, 2025

8th Pay Commission - DA, TA, HRA சம்பளத்துடன் அலவன்சுகளிலும் அதிரடி ஏற்றம், எவ்வளவு தெரியுமா?

 



இன்னும் சில மாதங்களில் 8வது ஊதியக்குழு அமலுக்கு வரவுள்ளது. இதன் கீழ், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் பெரிய அளவில் அதிகரிக்கவுள்ளன. இதற்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.


அலவன்சுகளிலும் ஏற்றம் இருக்கும்


மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மட்டுமல்லாமல் அவர்களது அலவன்சுகளிலும் ஏற்றம் இருக்கும். இது அவர்களது மொத்த சம்பளத்தை இன்னும் கணிசமாக அதிகரிக்கும். 8வது ஊதியக்குழுவின் அலவன்சுகளில் எவ்வளவு ஏற்றம் இருக்கும்? இந்தியாவில் அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது? அலவன்சுகளின் விவரம் என்ன? இவற்றை பற்றி தெரிந்துகொள்ளலாம்.


அரசு ஊழியர்களின் சம்பளம் எப்படி பிரிக்கப்படுகின்றது?


அரசு ஊழியர்களின் சம்பளம் பல பகுதிகளைக் கொண்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் அடிப்படை ஊதியம் (Basic Pay), அகவிலைப்படி (Dearness Allowance), வீட்டு வாடகைப் படி (House Rent Allowance), பயணப் படி (Travel Allowance) மற்றும் பிற படிகள் அடங்கும். மேலும், ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் சம்பள கட்டமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகக இருக்கும்.


அடிப்படை ஊதியம்


- இது ஒரு அரசு ஊழியரின் சம்பளத்தின் முக்கிய மற்றும் நிலையான பகுதியாகும். இது ஊழியரின் பதவி உயர்வு மற்றும் பணிக்காலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. 


- மீதமுள்ள படிகள் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. 


- முன்னர் அடிப்படை ஊதியம் மொத்த சம்பளத்தில் சுமார் 65% ஆக இருந்தது, ஆனால் இப்போது அது சுமார் 50% ஆக உள்ளது. 


- 8வது ஊதியக்குழுவில் தீர்மானிக்கப்படும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் தற்போதுள்ள அடிப்படை ஊதியத்துடன் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படும்.


அகவிலைப்படி (DA)


பணவீக்கத்தைச் சமாளிக்க ஊழியர்களுக்கு உதவ அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இது அடிப்படை ஊதியத்தின் ஒரு சதவீதமாகும். 


- மேலும் இது நுகர்வோர் விலைக் குறியீட்டை (CPI) பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. 


- ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வருடத்திற்கு இரண்டு முறை DA திருத்தப்படும். 


- உதாரணமாக, ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் மாதத்திற்கு ரூ.18,000 ஆகவும், அகவிலைப்படி விகிதம் 50% ஆகவும் இருந்தால், டிஏ தொகை மாதம் ரூ.9,000 ஆக இருக்கும். எனவே, மொத்த சம்பளம் ரூ.27,000 ஆக இருக்கும்.


- 8வது ஊதியக்குழுவில் தற்போதுள்ள அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு, அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்பட்டு அகவிலைப்படி கணக்கீடும் 1%, 2%, 3% என தொடங்கும் என கூறப்படுகின்றது.


வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA)


வாடகை வீட்டில் வசிப்பதற்கான வாடகையை செலுத்த ஊழியர்களுக்கு HRA வழங்கப்படுகிறது. 


- இது அடிப்படை ஊதியத்தில் 27%, 18% அல்லது 9% ஆக இருக்கலாம். 


- இந்த விகிதம் X, Y அல்லது Z வகை என பணியாளர் பணிபுரியும் நகரத்தைப் பொறுத்தது. 


- பெருநகர நகரங்களில் அதிக HRA விகிதங்கள் உள்ளன. 


- 8வது ஊதியக் குழுவில் இந்த கொடுப்பனவில் ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


பயண கொடுப்பனவு (TA)


- இந்த கொடுப்பனவு பயணம் அல்லது பயணச் செலவுகளை உள்ளடக்கியது. 


- இது ஒரு நிலையான தொகை. 


- இது பணியாளரின் சம்பள நிலை மற்றும் நகரத்தின் வகையைப் பொறுத்தது. 


ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?


- ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். 


- ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.20,000 ஆகவும், அகவிலைப்படி 55% (தற்போதைய அகவிலைப்படி) ஆகவும் இருந்தால், அகவிலைப்படி மாதத்திற்கு ரூ.11,000 ஆக இருக்கும். 


- 8வது ஊதியக் குழுவில், முதலில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படும். 


- இது நேரடியாக சம்பளத்தை உயர்த்தும்.


- ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 இலிருந்து 3 ஆக அதிகரித்தால், புதிய சம்பளம் சுமார் ரூ.29,000 ஆக இருக்கும். 


- அதாவது, பணியாளரின் மொத்த சம்பளம் புதிய அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி உட்பட மாதத்திற்கு ரூ.31,000 இலிருந்து ரூ.60,000 ஆக உயர வாய்ப்புள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad