மாணவர்களின் அன்பான அழைப்பை ஏற்று, அரசுப்பள்ளிக்கு சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் - Asiriyar.Net

Tuesday, July 22, 2025

மாணவர்களின் அன்பான அழைப்பை ஏற்று, அரசுப்பள்ளிக்கு சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ்

 




மாணவர்களின் அன்பான அழைப்பை ஏற்று, தொடக்கப்பள்ளியை பார்வையிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பதிவு


 ஒரத்தநாடு ஆம்பலாப்பட்டு அருகே உள்ள இலுப்பைத்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களின் அன்பான அழைப்பை ஏற்று, அப்பள்ளியைப் பார்வையிட்டோம்.


முதலமைச்சர் காலை உணவுத்திட்டப் பணியாளர்களுடன் கலந்துரையாடி, பள்ளி வளாகத்தைப் பார்வையிட்டோம். ஊர் மக்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கையை கேட்டறிந்து, உடனே அவற்றை பரிசீலிக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலரிடம் அறிவுறுத்தியுள்ளோம்.



No comments:

Post a Comment

Post Top Ad