பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை : முதலமைச்சரின் "அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டம் - விண்ணப்பிக்கும் முறை & தேவையான ஆவணங்கள் - Asiriyar.Net

Monday, July 28, 2025

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை : முதலமைச்சரின் "அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டம் - விண்ணப்பிக்கும் முறை & தேவையான ஆவணங்கள்

 




பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கும் முதலமைச்சரின் "அன்பு கரங்கள்" திட்டம் - செய்தி வெளியீடு 


 இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகள் "அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்டங்களில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்  என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ்குமார் இ.ஆ.ப., அவர்கள் தகவல்


இச்சீரிய திட்டத்தின் கீழ் பயன்பெற கீழ்க்கண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்:       

1. ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்).


2. கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்)


3. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறன் தன்மை (Physically/mentally challenged) கொண்டவராக இருந்தால்


4. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து. மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்)


5. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்)


கீழ்க்காணும் ஆவணங்களுடன்,  “அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற மாவட்டங்களில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்“ முகாம்களில் அல்லது மாவட்ட ஆட்சியர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம்.


தேவையான ஆவணங்கள்

1. குடும்ப அட்டையின் நகல்

2. குழந்தையின் ஆதார் அட்டையின் நகல்

3. குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/ கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பெண் சான்றிதழ்)

4. குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்.

5. பெற்றோரின் இறப்புச்சான்று நகல். 

உள்ளிட்டவற்றை மாவட்ட  குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்


Click Here to Download - Chief Minister's "Anbu Karangal" Financial Support Scheme - Application Procedure & Required Documents - Pdf



 

No comments:

Post a Comment

Post Top Ad