TETOJAC போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் விவரங்களை அனுப்ப இயக்குநர் உத்தரவு. - Asiriyar.Net

Thursday, July 17, 2025

TETOJAC போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் விவரங்களை அனுப்ப இயக்குநர் உத்தரவு.

 

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்ககங்களின் கூட்டு நடவடிக்கை குழு ( டிட்டோஜாக் ) பேரமைப்பின் சார்பில் 10 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி 16.07.2025 , 17.07.2025 மற்றும் 18.07.2025 ஆகிய மூன்று நாட்கள் மாவட்ட தலைநகரங்களிலும் தொடர் மறியல் போராட்டம் நடத்துவது தெரிவிக்கப்பட்டுள்ளதால். 


தொடக்கக கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் செயல்பாட்டிற்கு குந்தகம் ஏற்படாவன்னம் நன்முறையில் பள்ளிகள் செயல்பாட்டினை உறுதி படுத்தவும் , பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக அம்மாவட்டத்தில் உபரியாக பணிபுரியும் ஆசிரியர்களை கொண்டு பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் ஈடுபடுத்தி பள்ளி முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். 


மேலும் , போராட்ட காலங்களில் மருத்துவ விடுப்பை தவிர இதர விடுப்புகள் அனுமதிக்கப்பட கூடாது என்பதோடு கீழ்க்கண்ட படிவத்தில் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் விவரங்களை பூர்த்தி செய்து ஒவ்வொரு நாளும் காலை 10.00 மணிக்குள் இவ்வியக்கக மின்னஞ்சல் முகவரிக்கு ( deeasection2023@gamil.com ) அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .





No comments:

Post a Comment

Post Top Ad