ஒருங்கிணைந்தப் கல்வியின் கீழ் 5045 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சியளிக்க ஒவ்வொரு பள்ளிக்கும் மாதம் ரூ .4000 / - பயிற்சியாளர்களுக்கான ஊதியம் 3 மாதங்களுக்கு ரூ 12000 ஆக மொத்தம் ரூ .7254 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 5804 உயர் மேல் நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கு பயிற்சியளிக்க மாதம் ஒவ்வொரு பள்ளிக்கும் மாதம் ரூ .4000 / - பயிற்சியாளர்களுக்கான ஊதியம் 3 மாதங்களுக்கு ரூ 12000 ஆக மொத்தம் ரூ .823.55 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . பள்ளி மாணவிகள் எந்தவொரு சூழலையும் தைரியமாகவும் நிதானமாகவும் பக்குவமாகவும் எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் திறனை வளர்க்கும் வகையில் Karte Judo Taekwondo . Silambam போன்ற தற்காப்புக் கலைப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன இவ்வாறு வழங்கப்படும் பயிற்சிகள் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் அவர்களது பாதுகாப்புக்கும் உறுதுணையாக அமைந்துவிடுகின்றன.
மாவட்டங்களில் தற்காப்புக் கலைப்பயிற்சி வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் நிதி ஒதுக்கீட்டு விவரம் Elementary and Secondary என மாவட்ட வாரியாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது . இந்நிதி மாவட்டவாரியாக விடுவிக்கப்பட்டுள்ளது .
Click Here to Download - SPD - Self Defense For Students - Proceedings - Pdf
No comments:
Post a Comment