புதிய இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா - 24.07.2025 - Director Proceedings - Asiriyar.Net

Tuesday, July 22, 2025

புதிய இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா - 24.07.2025 - Director Proceedings

 




ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையின் படி அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதி பெற்று மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 2430 எண்ணிக்கையிலான பணிநாடுநர்களின் தற்காலிகத் தெரிவர் பட்டியல் பார்வை 1 ல் காணும் கடிதம் வாயிலாக பெறப்பட்டுள்ளது.


 அதுசமயம் இடைநிலை ஆசிரியர்களாக நேரடி பணி நியமனம் பெறும் பணிநாடுநர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆணை வழங்கப்படவுள்ளது . இவ்விழாவானது 24.07.2025 அன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது . அதன்பொருட்டு , பணிநியமனம் பெறுவதற்கு பணிநாடுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என தோராயமாக 5,000 - க்கு மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


எனவே , பணி நியமன ஆணை பெறவுள்ள பணிநாடுநர்களை அவரவர் மாவட்டத்திலிருந்து விழா நடைபெறும் அரங்கித்திற்கு வரவழைக்கும் வகையில் அவர்களை ஒருங்கினைத்து சென்னை வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள எதுவாக 58 கல்வி மாவட்டங்களில் பணிபுரியும் Nodal Block Education officer கள் அனைவரும் அவர்தம் பணிநாடுநர்களை தொடர்பு கொண்டு விழா நடைபெறும் அரங்கிற்கு நல்ல முறையில் அழைத்து வரும் பணியினை மேற்கொள்ளுமாறு 58 Nodal Block Education officer கள் உடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . இந்த 58 Nodal Block Education officer களும் 24,07,2025 அன்று காலை 8.00 மணிக்குள் விழா நடைபெறும் அரங்கிற்கு வருகை வரவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.


மேலும் , இவ்விழாவில் இதர பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு கீழ்கண்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் இதர வட்டாரக் கல்வி அலுவலர்கள் அனைவரும் 23.07.2025 காலை 11 அளவில் சென்னை தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு வருகை தரவேண்டும் .. இப்பணிகள் சிறப்புடன் தொய்வின்றி நடைபெறும் வகையில் அனைவரும் வருகைதந்து , விழாவினை செவ்வனே நடத்துமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது



No comments:

Post a Comment

Post Top Ad