தமிழக பள்ளி கல்வித்துறைக்கு அமெரிக்க குழு பாராட்டு - Asiriyar.Net

Friday, July 18, 2025

தமிழக பள்ளி கல்வித்துறைக்கு அமெரிக்க குழு பாராட்டு

 



தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை செயல்​படுத்​தும் முன்​னோடி திட்​டங்​களுக்கு அமெரிக்க குழு​வினர் பாராட்டு தெரிவித்தனர். அமெரிக்​கா​வில் இருந்து இந்​தியா வந்​துள்ள புகழ்​பெற்ற நிபுணர் குழு​வினர், தமிழகத்​துக்கு வருகை புரிந்​தனர். நேற்று முன்​தினம் தலை​மைச் செயல​கத்​தில் பள்​ளிக் கல்​வித்​துறை செய​லா​ளர் சந்​திரமோகனை இந்​த குழு​வினர் சந்​தித்​தனர்.


இந்த குழு​வில் பிலடெல்​பியா செவன்டி குழு தலைமை நிர்​வாக அதி​காரி லாரன் கிறிஸ்​டெல்​லா, கிளீவ்​லேண்ட், கேஸ் வெஸ்​டர்ன் ரிசர்வ் பல்​கலைக்​கழக சட்​டப் பள்​ளி​யின் பேராசிரியர் ஜூலியட் கோஸ்ட்​ரிட்​ஸ்​கி, கொலம்​பஸ் ஓகியோ பிர​தி​நி​தி​கள் சபை​யின் சட்ட உதவி​யாளர் பிரி​யாமெய்ஸ் இடம் பெற்​றிருந்​தனர்.


இந்த சந்​திப்​பின்​போது தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை​யில் செயல்​படுத்​தப்​படும் காலை உணவுத் திட்​டம், பள்​ளி​களில் இருந்து குழந்தைகள் இடைநிற்​றலை குறைத்​தல், அடிப்​படை எழுத்​தறிவு மற்​றும் எண்​ணறி​வு, சமத்​து​வம் மற்​றும் சமூக உணர்​வு​களை உள்ளடக்​கிய பாடத்​திட்ட சீர்​திருத்​தம் ஆகியவை குறித்து செய​லா​ளர் விளக்​கி​னார்.


அப்​போது, ஆதா​ரம் சார்ந்த கொள்​கைகள் மற்​றும் குழந்​தைகளை மையப்​படுத்​திய உத்​தி​கள் மூலம் பொதுக்​கல்​வியை மாணவர்களுக்கு வழங்​கும், பள்​ளிக்​கல்​வித் துறை​யின் உறு​திப்​பாட்டை அமெரிக்க பிர​தி​நி​தி​கள் பாராட்​டினர். மேலும், உள்​ளூர் பாரம்​பரி​யத்தை ஒருங்​கிணைப்​ப​தற்​கும், சமூகத்தை மையப்​படுத்​திய கற்​றலை ஊக்​கு​விப்​ப​தற்​கும், அனைத்து மட்​டங்​களி​லும் பள்ளி மாணவர்​களின் தலை​மைப் பண்பை வலுப்​படுத்​து​வதற்கு அரசு மேற்​கொள்​ளும் முயற்​சிகளை குழு​வினர் மிக​வும் பாராட்டினர்.


கல்​வி​யில் தொழில்​முறை பரி​மாற்​றம் மற்​றும் சர்​வ​தேச ஒத்​துழைப்​பு, பரஸ்பர புரிதல் மற்​றும் புது​மை​யான நடை​முறை​களை பகிர்வது ஆகிய​வற்​றின் உணர்வை இந்​த பயணம் வலுப்​படுத்​தி​ய​தாக அக்​குழு​வினர் தெரி​வித்​தனர். இத்​தகவல் பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad