அரசாணை 243, CPS ரத்து செய்து ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக - வலுக்கும் அரசியல் குரல் - Asiriyar.Net

Friday, July 18, 2025

அரசாணை 243, CPS ரத்து செய்து ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக - வலுக்கும் அரசியல் குரல்

 



தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டன. 


எதிர் வரும் ஆண்டில் நடக்க உள்ள தேர்தல் இதுவரை தமிழ்நாடு மக்கள் பார்த்திராத தேர்தலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. இதற்கு தவெக விஜய வருகை, பாமக உட்கட்சி விவகாரம், திமுக கூட்டணி விரிசல், பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி மறைமுக வாக்குவாதம் போன்றவை காரணமாக அமையும் என்றே கூறலாம். இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுக என்று வலியுறுத்தி உள்ளார்.


தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், கடந்த சில நாட்களாக அவர்களது முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இரண்டாவது நாளாக தொடர் நிலையில் உள்ள நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


அரசியல் ஆதரவு 


தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றி பிரச்சனைக்கு தீர்வு காணும் மாறும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் 


கம்யூனிஸ்ட் 


ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ள கம்யூனிஸ்ட்டுகள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கண்டு அரசு கொடுத்த வாக்குறுதி மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கூறியுள்ளது


அன்புமணி ராமதாஸ்




இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 


"பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் நிலையைப் போன்று ஊதியம் வழங்கப்பட வேண்டும், 243-ஆம் எண் அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும்" 


என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.



No comments:

Post a Comment

Post Top Ad