சென்னை அசோக் நகர் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளஸ் 2 மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது பரம்பொருள் அறக்கட்டளையை சேர்ந்த ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு வரவழைக்கப்பட்டார்.
இவர் தானே கடவுள் என கூறிக் கொண்டு பல்வேறு ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவர் உள்நாடு, வெளிநாடுகளிலும் அந்த நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.
அந்த பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு பேசுகையில் போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் இந்த ஜென்மத்தில் ஏழைகளாகவும் மாற்றுத்திறனாளிகளாகவும் கருப்பாகவும் பிறக்கிறார்கள் என சிறிதும் மனசாட்சியே இல்லாமல் மாற்றுத்திறனாளிகளின் மனம் புண்படுமே என்றும் யோசிக்காமல் மூடநம்பிக்கை கருத்தை மாணவர்களிடம் திணிக்க முயற்சித்தார்.
அப்போது இதை அங்கிருந்த கண் பார்வையற்ற ஆசிரியர் சங்கர் தட்டி கேட்டார். அவரையும் "நீங்கள் முதன்மை கல்வி அலுவலரை விட அறிவானரா" என கேட்டு மிகவும் அசிங்கப்படுத்தி பேசினார்.
இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்த அவர் நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என பேசினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை செப்டம்பர் 20-ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், சித்தர் சொன்னதால்தான் பேசினேன். சித்தர்கள் என்னிடம் பேசுவார்கள், அவர்களே என்னை வழிநடத்துவார்ள். பள்ளியில் நான் ஏதும் தவறாக பேசவில்லை. எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. மாணவிகளை நல்வழிப்படுத்தும் விதமாகவே பேசினேன். பல இடங்களில் இது போல் பேசியுள்ளேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment