மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கடைவீதியில் அரசு உதவி பெறும் சபநாயகர் முதலியார் இந்து பள்ளி செயல்பட்டு வருகிறது.
கடந்த 128 ஆண்டுகளாக இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் 1,100 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் படித்தவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர்.
இப்பள்ளியில் ஏராளமான இரட்டையர்கள் படித்து முடித்துவிட்டு வெளியேறி விட்டனர். தற்போது இந்த பள்ளியில் 34 இரட்டையர்கள் படித்து வருகின்றனர். இந்த இரட்டையர்களின் பெரும்பாலானோர் உருவத்தில் ஒற்று போவதால் இரட்டையர்களை அடையாளம் காண்பதில் கடினமாக இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment