10, 12ஆம் மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்தால் / பாதிப்பு ஏற்பட்டால் முதலில் என்ன செய்வது? - Asiriyar.Net

Thursday, September 26, 2024

10, 12ஆம் மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்தால் / பாதிப்பு ஏற்பட்டால் முதலில் என்ன செய்வது?

 




ஒருவருடைய பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ்கள் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் என்ன செய்வது? தீ விபத்து,வெள்ளம், கரையான் போன்றவற்றால் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது?



இது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். நம் கையை விட்டுப் போன சான்றிதழ்களின் நகல்களைப் பெற என்ன செய்ய வேண்டும்?


இதோ அதற்கான வழிமுறை:


சான்றிதழ் தொலைந்து போனவர் அவர் வாழும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.


அடுத்து சான்றிதழ்கள் தொலைந்து போனது குறித்து நாளிதழில் விளம்பரம் செய்ய வேண்டும்.


பின்னர் "சான்றிதழைக் கண்டுபிடிக்க முடியவில்லை' என்று காவல் துறையிடம் ஒரு சான்றிதழைப் பெற வேண்டும்.


உங்களுடைய பகுதி சார்ந்த தாசில்தாரிடம் காவல்துறையிடம் பெற்ற சான்றிதழைக் கொடுத்து, உங்களுடைய சான்றிதழ் தொலைந்துவிட்டதை உறுதிப்படுத்தும் வகையில்அவரிடம் இருந்து ஒரு சான்றிதழைப் பெற வேண்டும்.


அதுமட்டுமல்ல, நகல் சான்றிதழ் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரைவோலை வாங்க வேண்டும்.


எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் மூலமாக மாவட்ட கல்வி அதிகாரிக்கு நகல் சான்றிதழ்கள் பெறுவதற்கான விண்ணப்ப மனுவை அனுப்ப வேண்டும். மனுவில் படித்த ஆண்டு, பள்ளியிலிருந்து விலகிய மாதம், நாள் ஆகியவற்றை மறக்காமல் குறிப்பிட வேண்டும். அப்படி அனுப்பக் கூடிய விண்ணப்ப மனுவில், நாளிதழ் விளம்பரம், வங்கி வரைவோலை, தாசில்தாரிடம் பெற்ற சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.



விண்ணப்ப மனுவை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து, மாநில அரசுத்துறை இயக்குநருக்கு நகல் மதிப்பெண் சான்றிதழ் தர தாசில்தார் சிபாரிசு செய்வார்.


படித்த ஆண்டின் தன்மைக்கேற்ப நகல் மதிப்பெண் சான்றிதழ்கள்3 மாதங்களில் இருந்து 6 மாதங்களுக்குள் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்படும்.


தொலைந்து போன மதிப்பெண் சான்றிதழ்களுக்கான மாற்றுச் சான்றிதழ்களை எந்தப் பள்ளியில் படித்து முடித்தோமோ அந்தப் பள்ளியின் தலைமையாசிரியரிடம் இருந்து பெற முடியும்.


மாற்று சான்றிதழ்களைப் பெற இவ்வளவு வேலைகள் இருப்பதால், அதைத் தொலையாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது.




No comments:

Post a Comment

Post Top Ad