பள்ளியில் கள்ளிப்பால் சாப்பிட்ட மாணவர்கள் - பதறிய ஆசிரியர்கள் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை - Asiriyar.Net

Friday, September 13, 2024

பள்ளியில் கள்ளிப்பால் சாப்பிட்ட மாணவர்கள் - பதறிய ஆசிரியர்கள் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

 



ஒரு பக்கம் போராட்டத்தில் ஆசிரியர்கள்

மறுபக்கம் 5 மாணவர்கள் செய்த சம்பவம்

ஒரு மாவட்டத்தையே உலுக்கிய பயங்கரம் 

உயிரை பிடித்து பதறிய ஆசிரியர்கள்   



விளையாட்டு வினையில் முடிந்த கதையாக அரசு தொடக்க பள்ளி மாணவர்கள் ஐந்து பேர் கள்ளிப்பால் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...


அரியலூர் மாவட்டம் குணமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க பள்ளியை, இந்த 5 சிறுவர்களும் கதிகலங்கச் செய்திருக்கின்றனர் ...


மூன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவர், 4 மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் படிக்கும் தன் நண்பர்களுடன் சேர்ந்து கள்ளிப்பாலை விளையாட்டாக குடித்து விட்டதாக ஆசிரியர்களிடம் சொல்லி அதிர வைத்திருக்கிறார்...


பதறிப்போன ஆசிரியர்கள், கள்ளிப்பால் குடித்ததாக கூறிய மாணவர்கள் ஐவரையும் குணமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி கொடுத்து, பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்...


பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 31 கோரிக்கைகளை அமல்படுத்த கோரி, தொடக்க கல்வி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சம்பவத்தன்று குணமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் இல்லை...



இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மட்டும் பணியில் இருந்திருக்கின்றனர்...


இந்நிலையில், பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஆசிரியர்கள் யாரும் இல்லாததால், அருகில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அங்கிருந்த கள்ளிச்செடியின் முள்ளை உடைத்து அதில் இருந்த வந்த பாலை சுவைத்திருக்கின்றனர்.


இதனால், மாணவர்களின் நாக்கு வெந்து புண்ணான நிலையில், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களிடம் சொன்ன போது தான் வெளியே தெரிந்திருக்கிறது இந்த சம்பவம்..


நல்வாய்ப்பாக மாணவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் அச்சத்தை தான் ஏற்படுத்தி இருக்கிறது



No comments:

Post a Comment

Post Top Ad