வேலூர் அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிகள் சிலர் சக மாணவிக்கு பள்ளி வளாகத்திலேயே வளைகாப்பு நடத்துவது போன்று ஒரு ‘ரீல்ஸ்’ வீடியோ கடந்த சில நாட்களாக வைரலானது.
இந்த விழாவிற்கு அழைப்பிதழையும் வடிவமைத்து அதில் பகிர்ந்தனர். இந்த விவகாரம் வேலுாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் மோகன், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வீடியோ வெளியிட்ட மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அப்போது, மாணவியர் தெரியாமல் செய்துவிட்டோம் என கூறினர். தொடர்ந்து விசாரணை அறிக்கையை முதன்மை கல்விஅலுவலர் மணிமொழியிடம் சமர்பிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவின்பேரில், பள்ளி வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி நேற்று நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், தலைமை ஆசிரியை பிரேமா, மற்றும் வகுப்பு ஆசிரியைகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment