சிவகங்கை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கொம்புக்காரனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்தவா் தண்ணாயிரமூா்த்தி. இவா் மீது மாணவா்களிடம் பணம் வசூலித்தது, இவா் திட்டியதால் ஆசிரியை தற்கொலைக்கு முயன்றது உள்ளிட்ட புகாா்கள் எழுந்தன.
இதையடுத்து, கொம்புக்காரனேந்தல் கிராமமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். இதைத் தொடா்ந்து, தலைமையாசிரியா் தண்ணாயிர மூா்த்தியை சிங்கம்புணரி அருகே உள்ள முறையூா் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து உத்தரவிட்டாா்.
மேலும் தலைமையாசிரியா் மீதான குற்றச்சாட்டு குறித்து, மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் உத்தரவின் பேரில் சிவகங்கை கோட்டாட்சியா் விஜயகுமாா் பள்ளி ஆசிரியா்கள், கிராம மக்களிடம் விசாரணை நடத்தினாா்.
இந்த நிலையில், தலைமையாசிரியா் தண்ணாயிர மூா்த்தியை பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து உத்தரவிட்டாா்.
சிவகங்கை மாவட்டம்...
கொம்புக்காரனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி தான் இது... இப்பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவன் வகுப்புக்கு நோட் எடுத்து வரவில்லை எனக்கூறி இயற்பியல் ஆசிரியையும்...பள்ளியின் துணை தலைமை ஆசிரியையுமான சிவசங்கரி மாணவனைக் கண்டித்து அடித்ததாகக் கூறப்படுகிறது
சம்பந்தப்பட்ட மாணவன் மேலாண்மை குழு தலைவரின் மகனாம்...
இந்த சூழலில் அந்த மாணவன் குழந்தைகள் நல அமைப்பில் புகார் அளித்துள்ளார்... தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் தன்னாயிர மூர்த்தி...மேலாண்மை குழு தலைவர் உள்ளிட்டோர் சிவசங்கரியை விசாரித்ததாகக் கூறப்படுகிறது
மாணவர் புகார் கொடுக்க அவரது தந்தை உதவியதாக பேசப்படும் நிலையில்...இவ்விவகாரத்தில் மேலாண்மை குழு தலைவரும் தலைமை ஆசிரியரும் சேர்ந்து துணை தலைமை ஆசிரியை சிவசங்கரிக்கு அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது...
முன்பிருந்தே தன்னாயிர மூர்த்திக்கும் சிவசங்கரிக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக பேச்சும் அடிபடுகிறது...
இந்த சூழலில், புகாரின் அடிப்படையில் குழந்தைகள் நல அமைப்பினர் வந்து சிவசங்கரியை விசாரித்துள்ளனர்...
கடும் மன உளைச்சலில் இருந்த சிவசங்கரி திடீரென விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்...
உடனடியாக அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...உயிருக்குப் போராடி வருகிறார்...
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உதவித் தலைமை ஆசிரியை சிவசங்கரிக்கு நீதி கேட்டு பள்ளியில் போராட்டம் நடத்தினர்...
ஆசிரியர்களை வகுப்பறைக்கு செல்லவிடாமல் முற்றுகையிட்டு பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...
இதனால் அரசுப்பள்ளியில் பெரும் பரபரப்பு நிலவியது...
மாணவர்களைக் கண்டிக்கவும் முடியாமல்...செய்யும் தவறுகளைக் கண்டும் காணாமலும் இருக்க முடியாமல் பல ஆசிரியர்கள் நிலை திண்டாட்டமாக உள்ளதையே இச்சம்பவம் காட்டுகிறது...
தந்தி தொலைக்காட்சி செய்திகளுக்காக செய்தியாளர் இளையராஜா
No comments:
Post a Comment