"சம வேலைக்கு சம ஊதியம்" - இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - விரிவான பார்வை - Asiriyar.Net

Sunday, September 15, 2024

"சம வேலைக்கு சம ஊதியம்" - இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - விரிவான பார்வை

 




*இது பல வரலாற்றுப் புத்தகங்களை தனக்கு சொந்தமாக்கிக்கொண்ட மந்திரச்சொல்.*


*அந்த மந்திரச்சொல் இப்போது 2009க்கு பின் பணியில் சேர்ந்த 20000 இடைநிலை ஆசிரியர்களின் இதயத்துடிப்பை எகிறச்செய்து கொண்டிருக்கிறது!!!*



*இவர்களின் இதயத்துடிப்பு ஏன் எகிறவேண்டும்?*


*எங்கிருந்து? எப்படி? யாரால்? உருவானது இந்த மந்திரச்சொல்?*


*இந்த மந்திரச்சொல் வெல்லுமா? என்பதை அறிய கடந்தகால ஏடுகளைக் கொஞ்சம் தூசு  தட்டலாம்!!!*


😜😜😜

*தூசும் துகளும் பலருக்கு அலர்ஜியைத் தரவாய்ப்புள்ளது, முகக்கவசம் அணிந்து கொள்ளலாம்*

😷😷😷


*2009ஆம் ஆண்டுக்குப்பின் நடைபெற்ற நியமனங்கள் விபரம்*


*1. 2009 (மாநில பதிவுமூப்பு நியமனம்)*


*2. 2012-TET (ஆசிரியர் தகுதித்தேர்வு) நியமனம்*


*3. 2014-TET (ஆசிரியர் தகுதித்தேர்வு) நியமனம்*



🙋‍♂️ *இவற்றுள் 2009 நியமனம் மட்டும்,*


*6-வது ஊதியக்குழு பரிந்துரைகள் வெளியான 01.06.2009க்கு முன்னர் 5-வது ஊதியக்குழு நடைமுறையில் இருந்தபோது,*


*4500-125-7000 என்ற ஊதிய விகிதத்தில் Notification, Selection Process ஆகிய அனைத்தும் நடைபெற்று,*


*4500-125-7000 என்ற ஊதிய விகிதத்திலேயே தனிநபர் ஆணைகளும் வழங்கப்பட்டு,*


*நாடாளுமன்றத் தேர்தல்-2009 மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளான ஜூலை-15ல் பணியேற்க செய்தல் ஆகிய காரணங்களால் தாமதமாகி*


*5200+2800 ஊதிய விகிதத்தில் தாமதமாக அதாவது 01.06.2009க்கு பின்னர் 15.07.2009ல் பணியேற்ற நியமனம்.*


*2012, 2014 TET நியமனங்கள் முழுக்க முழுக்க 6வது ஊதியக்குழு காலத்தில் 5200+2800 ஊதிய விகிதத்திலேயே அமைந்தவை.*


சுருக்கமாகச் சொன்னால்


*2009ல் நியமனமானவர்களுக்கு ஆணையில் குறிப்பிட்ட ஊதியம் வழங்கப்படவில்லை என்பதுதான் கதைச்சுருக்கம்.*



*அப்படியானால் சமவேலைக்கு சமஊதியம் என்பது தவறானதா?*


அப்படி சுலபமாக கடந்துவிட முடியாது.


*சமவேலைக்கு சமஊதியமும் மத்திய அரசுக்கு இணையான ஊதியமும் அடிப்படையில் ஒன்றுதான்.*


*இரண்டுமே பிறிதொருவருக்கு வழங்கப்பட்டுவரும் ஊதியத்திற்கு சமமாக தனக்கும் வழங்கப்படவேண்டும் என்பதையே கருவாகக் கொண்டது.*


*அந்த பிறிதொருபவர் மத்திய அரசில் பணிபுரிபவர் என்றால் மத்திய அரசுக்கு இணையான ஊதியமாகவும், தமிழ்நாட்டில் பணிபுரிபவர் என்றால் ஒரே பதவி ஒரே கல்வித்தகுதிக்கான சமஊதியமாகவும் கருதப்படுகிறது.*


*ஆனால், 2009ஐப் பொறுத்தவரையில் ஒரே நபருக்கு இருவேறு ஆணைகள், இருவேறு ஊதியநிலை வழங்கப்பட்டதால் ஊதிய இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.*


இவ்வாறாக,


💥💥💥💥💥💥

*2009 நியமனத்திற்கு மட்டும் ஏற்பட்ட ஊதியப்பிரச்சினை 2009க்குப் பின் நியமனமான அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்குமான சமவேலைக்கு சமஊதியமென்னும் கோரிக்கையாக மாற்றப்பட்டவிதம்*

💥💥💥💥💥💥


*ஆரம்பத்தில் 2009ஆம் ஆண்டு நியமனமான ஆசிரியர்களுக்கு அவர்களது ஆணையில் குறிப்பிட்டபடி ஊதியத்தை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அவ்வாசிரியர்களால் 2010-2011 ஆண்டுகளில் உண்ணாவிரதம் நடத்தப்பெற்றது.*


*இந்த உண்ணாவிரதம் மூலம் தங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றெண்ணி 2009 நியமன ஆசிரியர்கள் பழைய சங்கங்களின் 9300+4200 கோரிக்கையிலிருந்து மெல்ல மெல்ல விலகி 2009நியமனத்திற்கான தீர்வை நோக்கி நகர்ந்த நிலையில்,*



*2012TET & 2014TET நியமன இடைநிலை ஆசிரியர்களும் இந்த கோரிக்கையில் இணைக்கப்பட்டதால் கோரிக்கைதாரர்களுக்கும் அரசுக்கும் தேவையில்லாத குழப்பமும் பிரச்சினையும் ஆரம்பமானது என்பதே 100% உண்மை.*


*ஆணையில் குறிப்பிட்டுள்ளதன்படி ஏற்பட்ட ஊதியக்குறைவை அவ்வாணை வைத்திருப்பவர்கள் மட்டும் அதாவது 2009நியமனம் மட்டும் பெறுவது எனவும், 6-வது ஊதியக்குழு பெருக்குக்காரணி 1.86 மூலம் 3170ஐ 2009க்கு பின் பணியில் சேர்ந்த TET-2012, TET-2014 என அனைத்து நியமனங்களுக்கும் பெறுவது எனவும், இருவேறு கருத்துக்கள் உருவானது.*


*இருவேறு கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் அனைவருக்கும் 1.86 மூலம் 3170ஐப் பெறுவது என்ற கருத்து அழுத்தப்பட்டதன் அடிப்படையில், ஆணையில் குறிப்பிட்டதைப் பெற்றுவிடலாம் என்ற 2009 நியமன ஆசிரியர்களின் கோரிக்கை மறைக்கப்பட்டு, சமவேலைக்கு சமஊதியம் என்ற புதிய கோரிக்கை உதயமானது.*


*இவ்வாறு உதயமான சமவேலைக்கு சமஊதியம் என்பதை ஏற்றவர்களின் ஒருங்கிணைப்பு, ஆர்ப்பாட்டம், வழக்கு, கவன ஈர்ப்பு போராட்டம், 7-வது ஊதியக்குழுவை ஏற்க மறுப்பு, காலவரையற்ற உண்ணாவிரதம் மற்றும் 2021-திராவிட முன்னேற்றக்கழக தேர்தல் அறிக்கை எண்-311 என ஏறத்தாழ 13 ஆண்டுகளாக சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கை நகர்ந்து வந்த நிலையில்,*


*இப்பிரச்சினையை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசால் அரசாணை (நிலை) எண்.25 பள்ளிக்கல்வித்(தொக3(1))துறை நாள்.30.01.2023ன்படி மதிப்புமிகு நிதித்துறை செயலர் (செலவினம்) அவர்கள் தலைமையில் மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் மற்றும் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் ஆகியோர் அடங்கிய மூன்றுநபர் குழு அமைக்கப்பட்டு கோரிக்கை சார்ந்த ஆய்வு நடைமுறையில் உள்ளது.*



*2009க்கு பின்னர் நியமனமான சுமார் 20000 இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு ஆசிரியர் இயக்கங்களில் இருப்பதால் மூன்று நபர் குழுவானது அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கருத்துக்களையும் கேட்க முடிவு செய்து அதனடிப்படையில் மூன்று சுற்றுகள் கருத்துக்கேட்பும் முடிவுற்றுள்ளது.*


இவ்வாறாக,


🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

*2009க்கு பின் நியமனம் பெற்ற ஆசிரியர்களில்*


*2009ல் நியமனம் பெற்றவர்கள் தங்களுக்கு ஆணையில் குறிப்பிட்ட ஊதியத்தை கொடுத்தால் போதும் என்ற நிலைப்பாட்டிலும்,*


*சமவேலைக்கு சம ஊதியம் கோருபவர்கள் 2009க்கு பின் நியமனமான 20000 பேருக்கும் (2009 நியமனம் பெற்றவர்கள் உட்பட) 6-வது ஊதியக்குழு பெருக்குக்காரணி 1.86 அடிப்படையிலான 8370 அடிப்படை ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் உள்ளனர்.*

🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️


இதில்,


*2009 நியமனம் பெற்றவர்கள்,*

*Notification,*

*Selection Process,*

*Certificate Verification,*

*Selection Order Issued,*

*Two types Orders with Two types of Salary*

*என்பன போன்ற கருத்துக்களை முன்வைத்து ஆணையில் குறிப்பிட்ட ஊதியத்தை வழங்க கோரி மூத்த ஆசிரியர் இயக்கங்களிடமும் தொடர்ந்து ஆதரவு பெற்று தீர்வுக்காக காத்திருக்கிறார்கள்.*


*சமவேலைக்கு சமஊதியம் கோருபவர்கள்,*

*ஒரு நாள் வித்தியாசம்*,

*ஒரே கல்வித்தகுதி*

*உச்சநீதிமன்றம் கூறும் சமவேலை சம ஊதியம்*

*திமுக தேர்தல் அறிக்கை 311*

*என்பன போன்ற கருத்துக்களை முன்வைத்து உரிய தீர்வுக்காக தனியாகக் காத்திருக்கிறார்கள்.*


*இந்த இரண்டுவகை நிலைப்பாட்டில்,*



🤔🤔🤔🤔🤔🤔

*2009நியமன ஆசிரியர்களுக்கு, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணைகளின்படி விதிகளுக்கு உட்பட்டு தீர்வு எட்டப்படலாம் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்*

🤔🤔🤔🤔🤔🤔


🤔🤔🤔🤔🤔🤔

*சமவேலைக்கு சம ஊதியம் என்ற நிலைப்பாட்டில்,*


🙋‍♂️ *ஊதியக்குழு நடைமுறைப்படுத்தப்படும்போது ஒவ்வொரு ஊதியக்குழுவிலும் ஊதியக்குழுவிற்கு முந்தைய நாள் அடுத்த நாள் என்று ஒருநாள் வித்தியாசம் தவிர்க்க இயலாதது,*


🙋‍♂️ *ஒரே கல்வித்தகுதி ஒரே பணி என்று கூறினாலும் ஊதியக்குழுவிற்கு முன், ஊதியக்குழுவிற்குப்பின் என்ற நிலைப்பாடுதான் மேற்கொள்ளப்படும்.*


🙋‍♂️ *உச்சநீதிமன்றம் கூறும் சமவேலை சமஊதியம் என்பது இருவேறு ஊதியக்குழுவில் நியமனமான - இருவேறு நியமனத்திற்கான -  காலமுறை ஊதியத்திற்குள் இடம்பெறாது.*



அவ்வாறு, இடம்பெறுமேயானால்,


*சுமார் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய தேவை எழுந்திருக்காது,*


 *அத்துடன் சமஊதியக் கருத்துடன் வழக்குக்கு சென்றிருந்தால், ஆமை வேகத்திலென்ன நத்தை வேகத்தில் நகர்ந்திருந்தால் கூட இந்நேரம் இலக்கை அடைந்திருக்கலாம்.*


*ஆனால், ஊக்க ஊதியத்தைப் பொறுத்தவரையில் உடனடியாக நீதிமன்றத்தின் கதவைத்தட்டியவர்கள், 6-வது ஊதியக்குழுவில் அநீதி இழைக்கப்பட்டதாக கூறுபவர்கள் நீதியை நாடாமல் இருப்பதன் மர்மம் என்ன?*


மேலும்,

*அரசியல் சட்டம் அனைவருக்கும் பொதுவானது, இவர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் சட்டப்படி உரிமை என்றால் தமிழ்நாட்டில் 01.06.2009க்கு பிறகு நியமனம் பெற்ற அனைத்து துறை ஊழியர்களுக்கும் 6-வது ஊதியக்குழுவின் 1.86  பெருக்குக்காரணி சாத்தியமாகி,*


பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் 

சால மிகுத்துப் பெயின்


*என்ற வள்ளுவன் மீண்டும் மீசை முறுக்குவான்.*


🙋‍♂️ *தேர்தல் அறிக்கை 311 மூலம் முயற்சித்தால் பலன் அடைய வாய்ப்புண்டு, அதுவும் நிதிக்கான கருணை கிடைத்தால் மட்டுமே!!!*


அதைவிடுத்து, *யாருக்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம், என் கையப்பிடித்து அவர் கெஞ்சினார், இவர் கண்ணீர் வடித்தார் என்று கர்ஜித்தால் "கலையலங்காரம் மறுபடியும் ஆஸ்பத்திரியா மாற்ற வேண்டியதுதான்"*

*என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.*

🤔🤔🤔🤔🤔🤔🤔



No comments:

Post a Comment

Post Top Ad