+2 Result 2024 - மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் - Asiriyar.Net

Monday, May 6, 2024

+2 Result 2024 - மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்

 

தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் எவ்வளவு? என்பதை பற்றி காணலாம். 


தமிழ்நாட்டில் உள்ள மாநில கல்வி பாடத்திட்டத்தில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடந்தது. சுமார் 7,80,550 பேர் தேர்வு எழுதினர். இதில் தனித்தேர்வர்கள் 8,190 பேரும் அடங்குவர். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 மையங்களில் நடைபெற்றது.  இதில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.


இந்நிலையில் திட்டமிட்டபடி மே 6ஆம் தேதியான இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம்போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 96.70 சதவிகிதம் ஆகவும், அரசு பள்ளிகளில் 91.32  சதவிகிதம், அரசு உதவி பெறும் பகுதிகளில் 95.49 சதவிகிதம் ஆகவும் உள்ளது. கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 0.58 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 


தேர்வு முடிவுகளை   www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ,www.tnresults.nic.in ஆகிய இணையதளங்கள் வழியாக காணலாம். அதுமட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலும் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் குறுஞ்செய்திகள் வழியாகவும் தேர்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அனுப்பப்பட உள்ளது. 


12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் இடத்தில் திருப்பூர் (97.45%), 2வது இடத்தில் ஈரோடு மற்றும் சிவகங்கை (97.42%), 3வது இடத்தில் அரியலூர் (97.25%) ஆகிய மாவட்டங்கள் பிடித்துள்ளது. கடைசி இடத்தில் திருவண்ணாமலை மாவட்டம் (90.47%) உள்ளது. 


இப்படியான நிலையில் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் பற்றி கீழே விரிவாக காணலாம். 





Post Top Ad