அந்த ஆலோசனையில் பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் வழங்குவது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் குமரகுருபரன், இயக்குநர் அறிவொளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் தேதி குறித்து தலைமைச் செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா அவர்கள் தலைமையில் 22.05.2024 ஆலோசனை கூட்டத்தில் மதிப்புமிகு பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4ல் வெளியாக உள்ள நிலையில் பள்ளி திறப்பை தள்ளிவைக்கலாமா? என்பது குறித்த முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment