தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? - பள்ளிக் கல்வித் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Asiriyar.Net

Friday, May 24, 2024

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? - பள்ளிக் கல்வித் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


தேர்தல் முடிவு, வெப்பம் அதிகரிப்பு காரணமாக ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான உடன் ஜூன் 6ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. 


2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு


2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும்.


எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.


அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.





No comments:

Post a Comment

Post Top Ad