சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு - Asiriyar.Net

Sunday, May 26, 2024

சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

 
சிறப்பு ஆசிரியர் மற்றும் தசைப்பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசியர்களுக்கு ஊதியம் மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூயத்தை தமிழக அரசு உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது.


அதன்படி, சிறப்பு ஆசிரியர் மற்றும் தசைப்பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.14,000 இல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.Post Top Ad