அரசுப்பள்ளி ஆசிரியர் தம்பதி தற்கொலை - 3 குழந்தைகளும் மரணம் - Asiriyar.Net

Thursday, May 23, 2024

அரசுப்பள்ளி ஆசிரியர் தம்பதி தற்கொலை - 3 குழந்தைகளும் மரணம்

 
சிவகாசி அருகே 3 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று, கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரை சேர்ந்தவர் லிங்கம். இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு ஆனந்தவள்ளி என்ற மகளும், ஆதித்யா என்ற மகனும் சசிகா என்ற 2 மாத குழந்தையும் உள்ளனர். லிங்கம் ராஜபாளையம் அருகே தேவதானம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், பழனியம்மாள் சிவகாசி அருகே சுக்கிவார்பட்டி பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தனர்.


இன்று( மே 23) காலை வெகு நேரமாகியும் இவர்களின் வீட்டு கதவு திறக்காததால், அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, லிங்கம், அவரது மனைவி பழனியம்மாள் மற்றும் 3 குழந்தைகள் இறந்த நிலையில் கிடந்தனர். போலீசார் 5 பேரின் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


கடன் தொல்லை காரணமாக கணவன், மனைவி இருவரும் குழந்தைகளை கொன்று விட்டு, அவர்களும் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. விசாரணைக்கு பின் முழுமையான விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.


Post Top Ad