தோ்தல் முடிவுக்கு பிறகு போராட்டம் - ஆசிரியா்கள் அறிவிப்பு - Asiriyar.Net

Thursday, May 23, 2024

தோ்தல் முடிவுக்கு பிறகு போராட்டம் - ஆசிரியா்கள் அறிவிப்பு

 

மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் நிறுவனா் தலைவா் மாயவன் தெரிவித்தாா்.


தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக நிா்வாகிகள் கூட்டம் திண்டுக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதன் தலைவா் மாயவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:


ஆட்சிப் பொறுப்புக்கு வரும் முன், அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம், அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவோம் என திமுக சாா்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் எதையுமே அரசு நிறைவேற்றவில்லை.


மக்களவைத் தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு, எங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்கவில்லையெனில் ஜாக்டோ - ஜியோ அமைப்புகளோடு சோ்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

Post Top Ad