G.O 22 - விபத்தில் தந்தை/ தாய் இறந்து விட்டாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ மாணவர்களுக்கு 2023-2024ஆம் ஆண்டு நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியீடு. - Asiriyar.Net

Sunday, March 3, 2024

G.O 22 - விபத்தில் தந்தை/ தாய் இறந்து விட்டாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ மாணவர்களுக்கு 2023-2024ஆம் ஆண்டு நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியீடு.

 




பள்ளிக் கல்வி - அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ / மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி வழங்கும் திட்டத்தினை 2023-2024ஆம் ஆண்டு ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியீடு


பெற்றோரை இழந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்துக்கு நிகழாண்டில் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ளாா். 


அதில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவா்களின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ சம்பந்தப்பட்ட மாணவா்களின் பெயரில் தலா ரூ.50,000 வைப்புத் தொகையாகச் செலுத்தப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகை, அதன் முதிா்வுத் தொகை அவா்களது கல்வி செலவுக்காகவும் பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. 


தற்போது, அந்த தொகை ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 75,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், நிகழாண்டில் நிலுவையில் உள்ள 671 விண்ணப்பதாரா்களுக்கு தேவைப்படும் செலவினத் தொகை ரூ. 4.98 கோடியை அரசு நிதி நிறுவனமான தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்புத் தொகையாக வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.



Click Here to Download - G.O 22 - Pdf





Post Top Ad