தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? - Asiriyar.Net

Friday, March 8, 2024

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?

 




மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பானது இன்னும் சில நாட்களில் தமிழக அரசால் அறிவிக்கப்படும் என்று பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்


அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 7 வது ஊதியக்குழு பரிந்துரையின் கீழ் ஆண்டுக்கு இரு முறை என மத்திய மற்றும் மாநில அரசுகள் அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றனர். 


அதாவது, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தி வழங்க வேண்டிய இந்த அகவிலைப்படியை மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் உயர்த்தி அறிவித்தது. 


இதன் தொடர்ச்சியாக மாநில அரசுகளும் தங்களது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கினார்.


தற்போது வரை, பெரும்பாலான அரசு ஊழியர்கள் 46% வரை அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். 


தற்போது மத்திய அரசானது மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது இந்த அகவிலைப்படி உயர்வானது ஜனவரி முதல் முந்தியது இட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 


இதனால் தமிழக அரசு ஊழியர்கள் தங்களுக்கும் நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு என்பது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் 


இந்த அறிவிப்பானது இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் அறிவிப்பு விரைவில்  வெளியிடப்படும் என்பதால் அதற்கு முன்பே அகவிலைப்படி உயர்வு என்பது தமிழக அரசால் அறிவிக்கப்படும் என்று பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்


இந்த ஆண்டுக்கான ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வானது, கடந்த மார்ச் மாத அறிவிப்பு போல் இல்லாமல் முன்கூட்டியே அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 


மேலும், இந்த அறிவிப்பில் அகவிலைப்படி ஆனது கூடுதலாக 4%  அதிகரித்து சுமார் 50% ஆக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கவும் அதிக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது


No comments:

Post a Comment

Post Top Ad