தொடக்கப்பள்ளிகள் மூடப்படாது: அமைச்சர் பேட்டி - Asiriyar.Net

Tuesday, December 6, 2022

தொடக்கப்பள்ளிகள் மூடப்படாது: அமைச்சர் பேட்டி

 திருச்செந்தூருக்கு நேற்று மாலை வருகை தந்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று மூலவர், சண்முகர் மற்றும் பெருமாள் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்தார். பின்னர் கோயில் விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘பள்ளிகளுக்கான அரையாண்டுத் தேர்வு வழக்கம்போல் நடைபெறும்.


அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் தொடக்கப் பள்ளி இணைப்பது அதிக அளவு மாணவர் சேர்க்கை வரவேண்டும் என்பதற்குதான். தொடக்கப்பள்ளியில் 10 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். எனவே, தொடக்கப் பள்ளிகள் ஒரு போதும் மூடப்படாது’’ என்றார்.Post Top Ad