ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் அரசு பள்ளிகளில் தொடக்க நிலை முதல் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக விளையாட்டு மற்றும் உடற்கல்வி மானியம் ( “ Sports and Physical Education ” ) வழங்கப்படுகிறது.
மனிதவள மேம்பாட்டுத் துறையிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட விளையாட்டு பொருள்களின் பெயர் பட்டியல் மற்றும் வழிகாட்டுநெறிமுறைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுப் பொருள்கள் கொள்முதல் செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் விளையாட்டு மற்றும் உடற்கல்வி உட்கூறின் மூலம் அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு கீழ்க்காணுமாறு நிதி வழங்கப்படுகின்றது.
* தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ .5,000
* நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ .10,000
* உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ .25,000
பள்ளிகள் ( 1 முதல் 5 வகுப்பு வரை , 6 முதல் 8 வகுப்பு வரை , 9 முதல் 12 வகுப்பு வரை ) கொள்முதல் செய்ய வேண்டிய விளையாட்டு உபகரணங்களின் பட்டியல் அடங்கிய MoE ( Ministry of Education ) Guideline அனுப்பப்படுகிறது.
Click Here To Download - Sports Materials SPD Guidelines - Pdf